டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கப்பல் அமைச்சகத்தை, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என்று பெயர் மாற்றியுள்ளார்.
நீர்வழி போக்குவரத்து துறையை கப்பல் போக்குவரத்து துறை என்றும் சுதந்திரம் வாங்கியது முதல் அழைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் இந்த பெயர் மாற்றப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், கப்பல் போக்குவரத்து துறை இனிமேல் ’துறைமுகங்கள் கப்பல் நீர்வழி போக்குவரத்து துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இனிமேல் இந்த பெயரில் தான் இந்தத் துறை இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு பாஜக தலைவர்கள் பலர் வரவேற்று உள்ளனர் என்றாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இது தேவையில்லாத பெயர் மாற்றம் என்றும் இந்த பெயர் மாற்றத்தால் அந்தத் துறை என்ன முன்னேற்றம் காணப்போகிறது என்றும் அவர் விமர்சனம் செய்து வருகின்றனர் கப்பல் போக்குவரத்து துறை இனி, ‘துறைமுகங்கள் கப்பல் நீர்வழி போக்குவரத்து துறையினர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது