சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருகிறது. அந்த வகையில் 137 நாள்களுக்கு பிறகு நேற்று(மார்ச் 22) பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து 102.16 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் பெட்ரோல் 75 காசுகள் உயர்ந்து 102.91 ரூபாய்க்கும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 92.95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 97.01 ரூபாய்க்கும், டீசல் 88.27 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நேற்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் எரிவாயு சிலிண்டர் விலை 965.50ஆக உள்ளது.
இதையும் படிங்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு!