கரோனா பொதுமுடக்கம் காரணமாக 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த, தியேட்டர்களை அக்.15 முதல் 50% விழுக்காடு பார்வையாளர்களுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், மகாராஷ்டிரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட மாநிலங்களில் கூட மக்கள் தியேட்டர்களுக்கு வர விரும்பவில்லை, கரோனா குறித்து அச்சமடைந்துள்ளனர். அதன்காரணமாக இந்தியாவின் மிகப் பெரிய திரையரங்க குழுமம் பெரும் அதிருப்தியில் உள்ளது.
இந்தியாவில், ஐநாக்ஸ் திரையரங்கக் குழுமம், 68 நகரங்களில் 147 மல்டிபிளெக்ஸ், 626 திரைகளைக் கொண்டுள்ளது. ஆனால், அவற்றில் தற்போது திறக்கப்பட்டுள்ள தியேட்டர்களில் ஒற்றை இலக்க பார்வையாளர்கள் கூட, வரவில்லை என தெரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐநாக்ஸ் குழும தலைமை நிர்வாக அலுவலர் அலோக் டாண்டன், "சினிமா தொழில் தற்போது ஒரு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியுள்ளது.
ஒரு புறம் புதிய திரைப்படங்கள் எடுக்கப்படாமல் உள்ளன. மற்றொரு புறம் எடுக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிடமுடியாமல் தயாரிப்பாளர் தவித்துவருகின்றன. இதற்கிடையில், மத்திய அரசு கட்டுபாடுகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. அப்படி அளித்தும் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. முக்கிய வியாாபார தளங்களான தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
கரோனா ஊரடங்கு காரணமாக மட்டும் ஐநாக்ஸ் காலாண்டு வருமானம் ரூ.67.83 கோடியை இழந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் ரூ.35.13 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டின் அரையாண்டு வருமானம் ரூ.519.94 கோடியாக இருந்தது. தற்போது அதிருப்தியில் உள்ளோம். அனைத்து தியேட்டர்களிலும் ஒற்றை இலக்க பார்வையாளர்கள் கூட வருவதில்லை. அதற்காக தற்போதி நாங்கள், ஒரு முழு தியேட்டரையும் வெறும் ரூ.2,999க்கு முன்பதிவு செய்யலாம் என தள்ளுபடி வழங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 வருடங்களில் தமிழகத்தில் 100 தியேட்டர்கள் - கார்னிவெல் சினிமாஸ் முடிவு