கரோனா தொற்று மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை பெரிதும் மாற்றியுள்ளது. பணத்தின் மூலம் கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்திலேயே பெரும்பாலானோர் ஆன்லைன் பேமெண்ட் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர். சிறிய தொகையான 10 ரூபாயும் டிஜிட்டல் வழியாக தான் செலுத்தி வருகின்றனர். கரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், டிஜிட்டல் மீதான ஈர்ப்பினால் மக்கள் அதையே பின்தொடர்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக 15 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோர் இணைய வழி பணப்பரிமாற்றம் செய்வது தெரியவந்துள்ளது. இதைக் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில், பணப்புழக்கம் 50 விழுக்காடு மக்கள் மத்தியில் குறைந்துள்ளது தெரிகிறது. இதற்கு மற்றோரு காரணம், ஆன்லைன் செயலிகள் பணப்பரிமாற்றத்திற்கு அதிகப்படியான சலுகைகள் வழங்குவதும் அடங்கும்.