ஃபோன் பே, அமேசான் பே போன்ற பல்வேறு நிறுவன செயலிகள், பீம் யூபிஐ செயலி, ரூபே கார்டு என பல்வேறு முறைகளைப் பின்பற்றி பேடிஎம் மூலமாகவே பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஒரே க்யூ.ஆர் கோடை பே.டி.எம். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இதற்கு முன் பே.டி.எம். க்யூ.ஆர். கோட் மூலம் பே.டி.எம். செயலியைக் கொண்டு மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திவிட்டார்கள் என்பதை கடைக்காரர்கள் செல்போனை பார்க்காமலே தெரிந்துகொள்ளும் வகையில் சவுண்ட் பாக்ஸ் என்னும் கருவியும் பே.டி.எம். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல், கணக்கு வழக்குகளை மேற்கொள்ள வியாபாரிகளுக்கு உதவும் செயலியையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடிகாரம், பேனா ஸ்டாண்டு, கழுத்தில் மாட்டும் டேக் என பல இடங்களில் பே.டி.எம். க்யூ.ஆர். கோடை பயன்படுத்தும் வகையிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் கொண்டு வரும் நபர் கழுத்தில் பே.டி.எம். க்யூ.ஆர். கோடை மாட்டிக்கொண்டு வந்தால் அதன்மூலமாகவே எளிமையாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
அடுத்த ஓராண்டுக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் 10 லட்சம் வியாபாரிகளை பே.டி.எம். செயலியை பயன்படுத்த வைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது நகர்புறங்களில் செயல்பட்டுவரும் பே.டி.எம். அடுத்தக்கட்டமாக சிறு நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது - பொருளாதார நிபுணர் ராஜேந்திரகுமார்