டெல்லி: ஆறு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தினைக் கொண்டாடும்வகையில் பேடிஎம் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கான கேஷ்பேக் சலுகைகளைப் பயனர்களுக்கு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 200 மாவட்டங்களில் இந்தச் சலுகைத் திட்டத்தினை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகப் பயனர்கள் கொண்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலத்தவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும் எனவும் நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமான சிறு, குறு முதல் நடுத்தர வணிகர்கள் வரை பேடிஎம் தளத்தைப் பயன்படுத்திவருகின்றனர். பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் இந்தச் சலுகைகளை நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி: மலிவான விலையில் அசரடிக்கும் அம்சங்கள்!
இதில் அதிக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வணிகர்களுக்கு இலவச டிஜிட்டல் பரிவர்த்தனை இயந்திரங்களும், பல பரிசுகளும் வழங்கப்படும் என பேடிஎம் உறுதியளித்துள்ளது. வணிகர் அல்லாத பயனர்களுக்கு 50 கோடி ரூபாய் மதிப்பிலான கேஷ்பேக் வழங்கப்படும் எனவும் சலுகை அளித்து நிறுவனம் அதிரடி காட்டியுள்ளது.
அதாவது, பயனர்கள் மேற்கொள்ளும் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் கேஷ்பேக் அவசியம் உண்டு. மாறிவரும் டிஜிட்டல் யுகத்தில், தங்கள் வசம் புது பயனர்களை ஈர்க்கவும், தொழில் துறையினருக்குப் பக்கபலமாகத் தங்கள் தளத்தை மாற்றவும் பேடிஎம் நிறுவனம் முனைப்புக் காட்டிவருகிறது.
இதன் தொடர்ச்சியாகவே அதிரடிச் சலுகைகளை அள்ளித்தரும் நிறுவனமாக பேடிஎம் மாறியிருக்கிறது.