ETV Bharat / business

1.4 லட்சம் பேருக்கு வேலை வழங்கவுள்ள அமேசான், பிளிப்கார்ட் ! - இந்தியாவில் வேலை வழங்க இருக்கும் அமேசான்

ஆன்லைன் வணிகத்தில் மாபெரும் நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் பண்டிகை காலங்களை ஒட்டி 1.4 லட்சம் பேருக்கு வேலை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது

eCommerce job offers
author img

By

Published : Sep 25, 2019, 12:39 PM IST

இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலையால் நாளுக்கு நாள் பல நிறுவனங்கள் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் கடந்த மாதம் ஹைதராபாத்தில் மிகப்பெரிய கிளை ஒன்றை அமேசான் நிறுவனம் தொடங்கியது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை பெறுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு அறிவிப்பை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பண்டிகை காலம் நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிகம் ஆன்லைன் வணிகத்தை பயன்படுத்துவார்கள் என்றும் அதனால் வேலை ஆட்களை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

அதன்படி கடந்த ஆண்டை விட 30 விழுக்காடு வேலை ஆட்களை, இந்தியாவில் உயர்த்துவதாக பிளிப்கார்ட் நிறுவனம் முடிவு செய்து, அறிவித்துள்ளது.

இதனிடையே உலகளவில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனம் 1 லட்சத்து நான்கு ஆயிரம் பேருக்கு வேலை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் தசரா, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிக வாடிக்கையாளர்களுக்கு விரைவில் நல்ல சேவை செய்ய முடியும் என ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: ஐதராபாத்தில் புதிய அலுவலகத்தை தொடங்கிய அமேசான்

Intro:Body:

Amazon job offer

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.