சமீபத்தில் சில மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவில் வெங்காயம் விற்பனையாகி வரும் நிலையில், உழவர் சந்தை மூலம் வெங்காயத்தை குறைவான விலையில் வாங்கலாம் என வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் அல்லி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 1998, 2010, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் வெங்காய விலை உயர்ந்து உள்ளது எனவும் அதன் பிறகு தற்போதுதான் உயர்ந்து விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த விற்பனை மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை என்றும் ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக தெரிவித்துள்ளார் பேராசிரியர் அல்லி. நடுத்தர மனிதர்களாக வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்களால் மட்டுமே விலை அதிகரிக்கிறது என தெரிவித்த அவர் உழவர் சந்தை மூலம் பொருட்களை வாங்கினால் விலை குறைவாக வாங்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எப்போது குறையும் வெங்காயத்தின் விலை? அமைச்சர்கள் விளக்கம்