குஜராத் அரசால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய இணையதளத்தில் முதலீடு தொடர்பான தகவல்களைப் பெறமுடியும். மேலும் முதலீட்டிற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அந்த இணையதளத்திலேயே பதிவேற்ற முடியும்.
மேலும், இந்த தளத்தில் மாநிலம் முழுவதும் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், மாநில கொள்கைகள் குறித்தும் விளக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து முதலீட்டாளர்களுக்கு விளக்க குஜராத் அரசின் தொழில்துறை விரிவாக்க பணியகம் சார்பில் கடந்த வியழக்கிழமை அன்று பயிலரங்கம் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய எப்ஐசிசிஐ (FICCI) குஜராத் மாநில குழு இணைத் தலைவர் சுனில் பரேக், "நிலையான தொழில்மயமாக்கல் என்பது காலத்தின் தேவை. நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நீண்டகால நோக்கில் சுற்றுச்சூழலினை பாதுகாப்பதாக இருக்க வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்வில் குஜராத் கூடுதல் தொழில்துறை ஆணையர் ஸ்வேதா தியோடியா, எம்.எஸ்.எம்.இ ஆணையர் ஒய்.பி. நிர்குடே ஆகியோர் பங்கேற்றனர்.