ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி அண்மையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் நிலவிவருகிறது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடைவிதிப்போம் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலராக அதிகரித்தது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக 'கடுமையான பதிலடி' கொடுப்போம் என்று ஈரான் தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் சரிந்தன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ஈரான் பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இஸ்லாமிய குடியரசில் 52 தளங்களைத் தாக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் போர் பதற்றத்தில் இந்திய பங்குச்சந்தை மேலும் பாதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு!