ETV Bharat / business

டிசம்பர் மாதம் இறுதிவரை வெங்காய விலை குறையாது. ஆனால், ஒரு ஆறுதல் செய்தி உள்ளது!

author img

By

Published : Nov 23, 2020, 10:05 PM IST

டெல்லி: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தில் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு இறுதிவரை வெங்காயத்தின் விலை குறையாது என்றும் ஆனால், உருளைக்கிழங்கின் விலை குறையும் என்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

retail onion price
டிசம்பர் மாதம் இறுதிவரை வெங்காய விலை குறையாது...ஆனால், ஒரு ஆறுதல் செய்தி உள்ளது

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை இந்தாண்டு இறுதிவரையில் வீழ்ச்சியை சந்திக்காது என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் விலை கிலோ 50 முதல் 70 ரூபாய்வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்த விற்பனையில் கிலோ வெங்காயம் 15 முதல் 47.5 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாள்களாக உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தின் விநியோகம் அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் அளவு குறைந்துள்ளது.

தோட்டக்கலை உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் ஷா பேசுகையில், "வெங்காய இறக்குமதி நிறுத்தப்படவில்லை. ஆனால், இறக்குமதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த வாரமும் துருக்கியிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, விநியோகிக்கப்படும் பெரும்பாலான வெங்காயங்கள் ராஜஸ்தானில் உற்பத்தியானவை.

மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கிலிருந்து வெங்காயம் கிடைத்தால் மட்டுமே வெங்காயத்தின் விலை குறையும் வாய்ப்புள்ளது. இந்தாண்டு இறுதிவரையில் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சியிருக்காது என்று நம்புகிறேன்" என்றார்.

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் வைத்திருக்க வேண்டிய வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, மொத்த விற்பனையாளர் 25 டன் வெங்காயமும், சில்லறை விற்பனையாளர்கள் இரண்டு டன் வெங்காயம் வைத்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் வழங்க வலியுறுத்தி போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.