2022-2023ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப். 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த வித மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. நாட்டில் விலைவாசி உயர்வு அதிகரித்துவரும் நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பை அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றத்தையும் நிதியமைச்சர் அறிவிக்காததால், தற்போதைய நிலையே தொடரவுள்ளது. தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாகவும், மூத்த குடிமக்கள் வருமான வரி உச்ச வரம்பு ரூ.3 லட்சமாகவே நீட்டிக்கவுள்ளது.
அதேவேளை, சில வரி செலுத்துனர்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது தவறுகள் ஏற்படுவதாக கருதுவதால், அதற்கு ஏதுவாக, வருமான வரித் தாக்கல் செய்வோர் தங்களின் திருத்தப்பட்ட வருமான வரியை இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Budget 2022: ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரண்சி அறிமுகம்