ETV Bharat / business

அமிதாப் கந்த் பதவி காலம் நீட்டிப்பு - harsh vardhan

டெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

NIT
author img

By

Published : Jun 28, 2019, 7:40 PM IST

நாட்டின் கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி ஆயோக் அமைப்பு 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமரும், இதன் நிர்வாகக் குழுவில் மாநில முதலமைச்சர்கள் தொடங்கி மாநில பிரதிநிதிகள் பலரும் உறுப்பினராக உள்ளனர்.

இந்த அமைப்பின் தலைமைச் செயல் அலுவலராக அமிதாப் கந்த், கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டுவருகிறார். இவரின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் பதவிக்கலாத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

HV
ஹர்ஷ் வர்தனின் வாழ்த்து

இவரின் பதவி நீட்டிப்புக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமிதாப் கந்த் அதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.