இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 விழுக்காடுகளாக சரிவடைந்த நிலையில், இந்திய பொருளாதாரத்தை உயர்த்த அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்ய, மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் வரும் 14ஆம் தேதி தொடங்கும் ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் வேலை நாளில் 2020-2021 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அமைந்துள்ள மத்திய அரசு தாக்கல் செய்யும், இரண்டாவது நிதிநிலை அறிக்கையாக இது அமைகிறது. மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் நிர்மலா சீதாராமனுக்கு இது இரண்டாவது நிதிநிலை அறிக்கை ஆகும். பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்ய, மேலும் வருவாய் வசூலில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்த நிதி அறிக்கையில் பேச இருப்பதால், இது குறித்த விவரங்களுடன் நிதி ஆலோசகர்கள் பங்கேற்க வேண்டும் என தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான துணைத் திட்டங்கள், குழந்தைகளுக்கான திட்டங்கள் போன்று விவரங்கள் புதிதாக கேட்கப்படவுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பின்னர், அனைத்து துறை செயலர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன் நிதி அமைச்சக செயலாளர் ஆலோசித்த பிறகு, நிதி நிலை அறிக்கை இறுதி செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு ஒரு கிராம் வெள்ளி - புரட்டாசியை சமாளிக்க வியாபாரியின் புதுயுக்தி!