வியாழக்கிழமை பங்குச்சந்தை முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 320.62 புள்ளிகள் உயர்ந்து 41,626.64 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 99.70 புள்ளிகள் உயர்ந்து 12,282.20 எனவும் வர்த்தகமானது.
மேலும் இன்ட்ராடே(Intra-Day) என்று அழைக்கப்படும் தினசரி வர்த்தகத்தில் சென்செக்ஸ் 41,649.29 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.
சிறப்பாக செயல்பட்ட பங்குகளில் அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல் , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளும், சரிவை சந்தித்த பங்குகளில் இன்போசிஸ், கோடக் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்குகளும் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கும் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளதாக பங்குத்தரகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 2020இல் உங்க மொபைலில் வாட்ஸ்அப் செயல்படாதாம்!