ETV Bharat / business

சமையல் எரிவாயு காலியா... ஒரு மிஸ்ட் கால் போதும்

நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலிருந்து (ஐஓசி) புதிய சமையல் எரிவாயு (எல்பிஜி) இணைப்பு அல்லது சிலிண்டர் ரீஃபில் செய்ய வேண்டுமா? 8454955555 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்.

இந்தியன் ஆயில் கேஸ் மிஸ்டு கால் நம்பர், இண்டேன்
indian oil missed call
author img

By

Published : Aug 9, 2021, 10:07 PM IST

டெல்லி: புதிய சமையல் எரிவாயு இணைப்பு அல்லது சிலிண்டர் ரீஃபில் செய்ய 8454955555 என்ற மிஸ்டு எண்ணை இந்தியன் ஆயில் நிறுவனம் (இண்டேன்) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்து சமையல் எரிவாயு தேவைக்கு முன்பதிவு செய்யலாம். அதுமட்டுமில்லாமல் 14.2 கிலோ சிலிண்டருக்கு பதிலாக, 5 கிலோ சிலிண்டரை பயனர்கள் தேர்வு செய்யும் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எந்த மூலையிலிருந்தும் 8454955555 என்ற எண்ணுக்கு பயனர்கள் மிஸ்டு கால் கொடுத்து, உடனடி சேவைகளை பெற முடியும். நுகர்வோரின் நேரத்தை மிச்சப்படுத்தி, சேவைகளை பலப்படுத்தவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களின் சிலிண்டரை ரீஃபில் செய்து பணம் செலுத்த, பாரத் பில் கட்டண முறை, இந்தியன் ஆயில் ஒன் செயலி அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம். அதுமட்டுமில்லாமல் வாட்ஸ்அப் செயலி மூலம் 7588888824 எண்ணிற்கும், குறுந்தகவல் மூலம் 7718955555 என்ற எண்ணிற்கும் குறுஞ்செய்தி அனுப்பி பதிவுசெய்து கொள்ளலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.