ETV Bharat / business

ஜியோவின் பங்குகளை ரூ.9 ஆயிரம் கோடிக்கு வாங்கிய முபாதலா நிறுவனம்! - ரிலையன்ஸ் இன்டஸ்ரிஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுனத்தின் பங்குகளை அபுதாபியைச் சேர்ந்த முபாதலா என்ற நிறுவனம் ரூ.9 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது.

JIO
JIO
author img

By

Published : Jun 5, 2020, 3:28 PM IST

அபுதாபியைச் சேர்ந்த முன்னணி முதலீட்டு நிறுவனமான முபாதலா இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் 1.85 விழுக்காடு பங்குகளை 9 ஆயிரத்து 93 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

சுமார் 229 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட முபாதலா நிறுவனம் வான்வெளி, சுரங்கம், எரிவாயு, சுகாதாரம், மருந்து உற்பத்தி என பல்வேறு துறைகளில் இயங்கிவருகிறது. இதுகுறித்து ரிலையன்ஸ் இன்டஸ்ரிஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, இந்தியாவை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக அபுதாபியின் தலைசிறந்த நிறுவனமான முபாதலாவிடம் கைகோர்த்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ள ஜியோ நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என, முபாதலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கல்தூன் அல் முபாரக் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்குள் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்தா, ஜெனரலே அட்லான்டிக், கே.கே.ஆர்.முபாதலா என, ஆறு சர்வதேச நிறுவனங்கள் சுமார் 87 ஆயிரத்து 655 கோடி ரூபாய் அளவில் ஜியோவில் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீன செயலிகளை நீக்க உதவும் இந்திய செயலியை நீக்கியது ஏன்? கூகுள் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.