மத்திய நிதிநிலை அறிக்கை, ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு பின் பெரும்பாலான ஆட்டோமொபைல் தொழில்கள் நஷ்டத்தை சந்தித்தன.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா லிமிடெட், தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அதன் பணியாட்களை குறைக்கப்போவதாக கூறியது. இந்த செய்தி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்நிறுவனம் 3000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்துள்ளது.
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் ஆர்.சி. பார்கவா, தற்காலிகமாக நிமிக்கப்பட்ட 3000 ஊழியர்களின் ஒப்பந்தங்களை புதுப்பிக்கவில்லை என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த வருடம் CNG வாகனங்களின் கட்டணத்தை 50 விழுக்காடு உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.