டெல்லி: இந்தியாவின் பெரும் கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட, 2020ஆம் ஆண்டு இதே மாதத்தில் 20.2% விழுக்காடு அளவிற்கு கூடுதலாக வாகனங்களை விற்றுள்ளது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறுவனம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 296 வாகனங்களை விற்றிருந்தது. இதே 2020ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து 226 வாகனங்களை நிறுவனம் விற்றுள்ளது. இது 20.2% விழுக்காடு உயர்வாகும்.
உள்நாட்டில் விற்பனை மட்டும் 17.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆல்டோ, எஸ்-பிரெஸோ கார்களின் விற்பனை 24,927ஆக 4.4 விழுக்காடு அளவு உயர்ந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 23,883ஆக விற்பனையாகியிருந்தது.
டெல்லி - ஆக்ரா சுங்கச் சாலைப் பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இன்ஃப்ரா!
ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசைர் ஆகிய கார்களின் விற்பனை 18.2% (77,641 கார்கள்) உயர்ந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இறுதியில் 65,673 கார்கள் விற்பனையாகியிருந்தன.
விடாரா பிரிஸா, எஸ்-கிராஸ், எர்டிகா ஆகிய வாகனங்களின் விற்பனை 8% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.