டெல்லி: நாட்டின் மிகப்பெரும் கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, தங்கள் நிறுவன கார்களின் விலையை உயர்த்தவுள்ளது.
கார் உதிரி பாகங்கள், மூலப் பொருள்களின் விலை உயர்வால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும், எந்த அளவு விலை உயர்வு இருக்கும் என்பது குறித்து, நிறுவனம் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
மாருதி சுசூகி நிறுவனம், தனது நிறுவன வாகனங்களுக்கு 1.6 விழுக்காடு சராசரி விலை உயர்வை இந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி அறிவித்தது. அதற்கும் முன்னதாக, வாகன உற்பத்தியாளர் உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டும் 34,000 ரூபாய் வரை விலையை உயர்த்தியிருந்தது.
இச்சூழலில், தற்போதைய விலை உயர்வு குறித்த செய்திகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.