ETV Bharat / business

கார் உற்பத்தியைத் தொடங்கிய மாருதி சுசூகி நிறுவனம்! - இந்தியாவில் கார்களுக்கான வரி

ஹரியானா மாநிலம் மானேசரிலுள்ள மாருதி சுசூகி கார் உற்பத்தி ஆலையில் 50 நாள்களுக்கு பிறகு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

maruti-resumes-operations-at-manesar-plant-on-single-shift-basis

author img

By

Published : May 12, 2020, 4:46 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்திகள் நிறுத்தப்பட்டுள்ளன. மே 3ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவில் சில தளார்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் மானேசரில் உள்ள மாருதி சுசூகி ஆலையில் கார் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாருதி சுசூகி இந்தியாவின் தலைவர் ஆர் சி பார்கவா பேசுகையில், '' மானேசரில் உள்ள ஆலையில் கார் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன. முதல் கார் இன்று வெளிவரும். ஆலையில் பணிபுரியும் 75 விழுக்காடு தொழிலாளர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரே ஷிப்ட் அடிப்படையில் பணி நடைபெற்று வருகிறது.

அரசு விதித்த விதிமுறைகளின் அடிப்படையில் இரண்டு ஷிப்ட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் விற்பனை அதிகரித்தவுடன் உற்பத்தியும் அதிகரிக்கப்படும். அப்போது அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வருவார்கள்.

கரோனா வைரஸ் சூழல் எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையைப் பாதிக்குமா என்பது பற்றி இப்போது கூற முடியாது. ஆனால் மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவில் தான் கார்களுக்கு அதிகப்படியான வரிகள் விதிக்கப்படுகிறது.

மத்திய அரசின் வரியும் சரி, மாநில வரியும் சரி... இரண்டுமே அதிகமாக உள்ளன. இதனால் மற்ற வளரும் நாடுகளில் செலுத்தும் வரியோடு இந்தியாவில் கார் உற்பத்தியாளர்கள் அதிகமாக வரி செலுத்தி வருகிறோம்'' என்றார்.

இதையும் படிங்க: பணத்தை ஏழைகள் கையில் கொடுங்கள் - நோபல் பரிசு வென்ற எஸ்தர் டஃப்லோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.