கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக வரலாறு காணாத சரிவை இந்தியப் பங்குச்சந்தை கடந்த ஒரு மாதமாக சந்தித்துவருகிறது.
இந்நிலையில் இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கியதால், முக்கியப் பங்குகள் அனைத்தும் சரிவை சந்தித்தன.
கடும் வீழ்ச்சிக்கு அனைத்து நிறுவன பங்குகளின் புள்ளிகளும் குறைந்ததால், வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பங்குச்சந்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே 10 சதவிகிதம் வரை பங்குச்சந்தை பங்குகள் சரிவை சந்தித்ததால், இந்த நிறுத்திவைப்பு ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 9.58 மணிக்கு நிறுத்திவைக்கப்பட்ட பங்குச்சந்தை, 10.43 மணிக்கு மீண்டும் தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை