ஐந்து நாட்கள் தொடர் உயர்வைச் சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 143.62(0.31%) புள்ளிகள் சரிந்து 45,959.88 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல, தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50.80 (0.31%) புள்ளிகள் சரிந்து 13,478.30 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காடுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல ஐ.டி.சி., பிரிட்டானியா, இந்துஸ்தான் யூனிலிவர், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
மறுபுறம் UPL ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ரா சிமெண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
தங்கம், வெள்ளி விலை
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 390 ரூபாய் குறைந்து 46,450 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 1,000 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 63,400 ரூபாய்க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: ஃபோர்டு வாகனங்களின் விலை ஜனவரி முதல் உயர்கிறது