மும்பை: முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்ததால் பங்குச் சந்தை இன்று (அக்டோபர் 22) சரிவைச் சந்தித்தது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
என்டிபிசி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐஓசி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. இண்டஸ்இண்ட் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், சிப்லா போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 148.82 புள்ளிகள் குறைந்து 40,558.49 புள்ளிகளில் வர்த்தகமானது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 41.20 புள்ளிகள் குறைந்து 11,896.45 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்வுடன் ரூ.73.54 ஆக இருந்தது.
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 16 புள்ளிகள் உயர்ந்து 2,966 ரூபாயாக இருந்தது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 484 புள்ளிகள் குறைந்து 50,849 ரூபாயாக இருந்தது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 1,069 புள்ளிகள் குறைந்து 62,560 ரூபாயாக இருந்தது.