ETV Bharat / business

தொடர்ந்து 5ஆவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை! - today petrol price news

மும்பை: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் (நவ. 6) ஏற்றம் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

தொடர்ந்து 5ஆவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!

author img

By

Published : Nov 6, 2020, 10:39 PM IST

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (நவ. 6) 41,438.12 புள்ளிகளுடன் ஆரம்பத்திலேயே ஏற்றத்துடன் தொடங்கியது. திடீரென்று பிற்பகல் புள்ளிகள் உயர்ந்ததால், இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 552.90 புள்ளிகள் உயர்ந்து 41,893.06 புள்ளிகளில் முடிவடைந்தது. இது நேற்றைய புள்ளிகளிலிருந்து 1.34 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இதைப்போன்று தேசியப் பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 143.25 புள்ளிகள் உயர்ந்து 12,263.55 புள்ளிகள் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. இது நேற்றைய புள்ளிகளிலிருந்து 1.18 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ரிலையன்ஸின் பங்குகள் 3.59 விழுக்காடு உயர்ந்தது. மேலும், பஜாஜ் பின்எஸ்வி, இண்டூஸ்டீயன்பிக், ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், கோட்டாக் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. மறுபுறம் மாருதி, கெயில், ஏசியன் பெயிண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

தொடர்ந்து 5ஆவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 290 ரூபாய் அதிகரித்து ரூ.48,390-க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 1, 700 ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.64,500க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமுமின்றி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க...பெரும் முதலீட்டுடன் தெலங்கானாவில் கால்பதிக்கும் அமேசான் வெப் சர்வீசஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.