ETV Bharat / business

ஜிஎஸ்டி வசூலில் மீண்டும் சாதனை! - சரக்கு மற்றும் சேவை

டெல்லி: தொடர்ந்து நான்காவது மாதமாக ஜிஎஸ்டி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி
author img

By

Published : Apr 1, 2021, 4:24 PM IST

கரோனாவிலிருந்து பொருளாதாரம் மீண்டுவந்து கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து நான்காவது மாதமாக ஜிஎஸ்டி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தாண்டு, மார்ச் மாதம், மொத்தமாக 1,23,902 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட 27 விழுக்காடு அதிகமாகும்.

கடந்த சில மாதங்களாகவே பொய்யான பில்லிங்கை தீவிரமாக கண்காணித்தல், ஜிஎஸ்டி, வருமான வரி, முறையான வரி நிர்வாகம் போன்றவற்றால் வரிவருவாய் அதிகரித்துள்ளது.

அதில், சிஜிஎஸ்டி 22,973 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டி 29,329 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. 62,842 கோடி ரூபாய் ஐஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட்டுள்ளது. 8,757 கோடி ரூபாய் செஸ் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து பொருளாதாரம் மீண்டுள்ளதை பிரதிபலிக்கும் வகையில் ஜிஎஸ்டி வசூல் உச்சத்தை தொட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.