ETV Bharat / business

ஊரடங்கில் 5% வரை விற்பனை உயர்வு: சாதனை படைத்த பார்லி ஜி! - ஊரடங்கில் 5% வரை விற்பனை உயர்வு: சாதனை படைத்த பார்லி ஜி!

டெல்லி: முழு ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பசியாற்றியதில் 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டான, பார்லி ஜி முக்கிய பங்காற்றியுள்ளது எனவும்; மேலும் இந்த மூன்று மாதங்களில் பார்லி ஜியின் விற்பனை ஐந்து விழுக்காடு வரை உயர்ந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

parle g
parle g
author img

By

Published : Jun 11, 2020, 2:04 AM IST

40 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் அதன் விற்பனை விகிதம் பன்மடங்கு அதிகரித்துள்ளதோடு, உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பார்லி ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏழைகளும் எளிதில் வாங்கக்கூடிய விலையில், 5 ரூபாய்க்கு பார்லி ஜி பிஸ்கட் கிடைப்பதால், இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பார்லி பிஸ்கட் நிறுவனமானது, 82 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இதன் தயாரிப்பான பார்லி ஜி பிஸ்கட் பாக்கெட்களுக்கு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக ஏழை, எளியோர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

காலையில் ஒரு பார்லி ஜி 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி, தேநீரில் நனைத்து சாப்பிட்டுவிட்டு, அன்றைய காலை உணவை முடித்துக் கொள்பவர்கள் ஏராளம்.

ஊரடங்கின்போது உணவு உற்பத்தி நிறுவனமான பார்லிக்கு விதி விலக்கு தரப்பட்டதால், லாக் டவுன் காலத்திலும் பார்லி ஜி பிஸ்கட் தயாரிப்புகள் தொடர்ந்து நடைபெற்றன.

இதனிடையே தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரை, தனி வாகனம் மூலம் வீடுகளில் இருந்து அழைத்து வந்து, அழைத்துச் சென்று விடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது, பார்லி நிறுவனம்.

நாடு முழுவதும் 130 இடங்களில் இந்த பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது.

கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அரசுகளிடம் இருந்து இந்த பிஸ்கட் பாக்கெட்கள்கோரி ஆர்டர்கள் குவிவதாக, பார்லி நிர்வாகம் தெரிவித்தது.

வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு 130 தொழிற்சாலைகளில் 400 மில்லியன் பிஸ்கட்கள் தயாரிப்போம் என்றும்; தங்களது ஒரு மாத உற்பத்தியை ஒரே அடுக்காக அடுக்கினால் பூமியையும், நிலவையும் இணைக்கும் தூரத்திற்கு அது நீளமாகச் செல்லும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: புதிய யுத்தியைப் பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை விரட்டும் ராஜஸ்தான் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.