கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் எனப்படும் முழு முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. சுகாதாரத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தினசரி தொழிலில் ஈடுபடும் அமைப்பு சாரா தொழிளாலர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் அதிகளவில் உள்ள கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித் தொகை நேரடியாக வழங்கப்படும் என மத்திய தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்காக கட்டுமான தொழிலாளர் சட்டத்தின்படி மத்திய அரசு சார்பில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி நாடு முழுவதும் உள்ள 3.5 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசி வரி வருவாயில் உள்ள 53 ஆயிரம் கோடி ரூபாய் தொகையிலிருந்து உதவித் தொகை வழங்கப்படும், உதவித்தொகை எவ்வளவு என்பதை அந்தந்த மாநிலங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சரிவிலிருந்து மீண்ட ரிலையன்ஸ் குழும பங்குகள்