ETV Bharat / business

எப்படி இருக்கும் 2019 பட்ஜெட் வரிகள்? கே.பி.எம்.ஜி சர்வே முடிவுகள் - budget 2019

டெல்லி: நாடாளுமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வரிகள் குறித்து கே.பி.எம்.ஜி என்ற நிறுவனம் எடுத்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

எப்படி இருக்கும் 2019 பட்ஜெட் வரிகள்
author img

By

Published : Jul 1, 2019, 12:59 PM IST

நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 256 நபர்களிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில், சுமார் 74 சதவீதம் பேர் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படலாம் என்றும், 10 கோடிக்கும் மேல் வருமனம் ஈட்டும் பெரும் பணக்காரர்களுக்கு புதிதாக 40 சதவீதம் வரி அறிமுகப்படுத்தப்படலாம் என்று 58 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 1953 முதல் 1985ஆம் ஆண்டு வரை இருந்த பரம்பரை வரி எனப்படும் மூதாதையர்களிடமிருந்து பெரும் சொத்துக்களுக்கான வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று 13 சதவீதம் பேரும் எஸ்டேட் வரி மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று 10 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

அதே போல வீட்டுவசதித் துறையை ஊக்கவிக்கும் வகையில் வீட்டுக் கடன் வட்டிக்கான வரி விலக்கு வரம்பு தற்போதுள்ள இரண்டு லட்சத்திலிருந்து அதிகரிக்கக்கூடும் என்று 65 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

மேலும் 46 சதவீதம் பேர் காப்ரேட் நிறுவனங்களுக்கான 25 சதவீத வட்டி விகதம் குறைய வாய்ப்பில்லை எனவும் 56 சதவீதம் பேர் இந்த ஆண்டு பட்ஜெட்டில் முக்கிய வரி தொடர்பாக மாற்றங்களை நிர்மலா சீதாராமன் கொண்டு வர மாட்டார் என்றும் கருத்து தெரிவித்துள்னர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.