இந்தியாவின் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தொடர்ச்சியான வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவித்துவருகிறது. நடப்பாண்டுக்குள் தனது கடன் முழுவதையும் அடைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் ரிலையன்ஸ் குழுமம் தொடர் திட்டங்களை முன்னெடுத்துவருகிறது.
இதையடுத்து முன்னணி சர்வதேச நிறுவனங்களான ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., முபாதலா ஆகிய நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்துள்ளன.
இதைத்தொடர்ந்து சவுதி அரேபியாவின் பி.ஐ.எஃப். என்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை ஜியோ மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோவின் 2.33 விழுக்காடு பங்குகளை அந்நிறுவனம் வாங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜியோவின் 25 விழுக்காடு பங்குகள் வேறு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளன. முன்னதாக ரிலையன்ஸ் குழுமம் சவுதி அரம்கோ எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 16 ஆண்டுகளாக முதல் இடத்தில் ஆல்டோ!