நிறுவனங்களின் வாதத்தில் வாடகை, ஈவுத்தொகை, வட்டி வருமானம், நிலையான சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம், உரிமத்தின் மானியம் மற்றும் செயல்பாடு, தொலைத்தொடர்பு அல்லாத வருவாய்கள் போன்றவை கணக்கிடப்பட்ட மொத்த வருவாய் வரையறையிலிருந்து விலக்கு வேண்டும் என்று கூறப்பட்டது.
அந்த வகையில் ஏர்டெல், வோடோபோன்-ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது அரசு தொடுத்த வழக்கில் 92 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக வருமானம் குறைந்துள்ளதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட 1.33 லட்சம் கோடி ரூபாய் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்தனர்.
இவ்வழக்கின் முடிவை அறிவித்த உச்ச நீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வைத்த கோரிக்கையை நிராகரித்ததுடன் 92 ஆயிரம் கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஏர்டெல்லும், வோடபோனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ரிலையன்ஸ் திருத்தப்பட்ட மொத்த வருவாய் ரூ.195 கோடியை செலுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தாண்டு ஜனவரி 31ஆம் தேதிவரை நிலுவையிலிருக்கும் தொகையை கட்டிவிட்டதாக ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரிலையன்ஸின் போட்டியாளர்கள் ரூ.88,624 கோடி நிலுவை வைத்துள்ளனர். அவர்கள் இதற்கு கூடுதலாக காலஅவகாசம் கோரியுள்ளனர். முன்னதாக ஏர்டெல், வோடஃபோன் குறித்து கருத்து தெரிவித்த ரிலையன்ஸ், அவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதாக தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: வெளியேறிய வோடஃபோன்... அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்!