டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜாகுவார் லேண்ட் ரோவர்(Jaguar Land Rover), விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. சொகுசு கார் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் கார்களில் ஜாகுவார் ரகமும் ஒன்று.
விலை அதிகமாக காணப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த ரகத்திற்கென ஒரு இடம் உண்டு. அதற்கேற்றார்போல் அதிகமான அளவில் விற்பனை ஆகி வந்த ஜாகுவார் கடந்த மாத விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 41,866 யூனிட்கள் விற்பனையான ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10,606 யூனிட்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 22.9 விழுக்காடு குறைவு என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் உலகளவில் ஆட்டோமொபைல் துறைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் Q3 காலாண்டு தொடக்கத்தில் சீனாவில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கியுள்ளது என ஜாகுவார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஃபெளிக்ஸ் ப்ருதிகம்(Felix Brautigam) தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாட்டுச் சாணத்தில் அழகு சாதனப் பொருள்கள்: அசத்தும் பட்டதாரி இளைஞர்!