கரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம், தொழில் துறை நிறுவனங்கள் என அனைத்தும் கடும் சரிவைச் சந்தித்துவருகின்றன. இந்நிலையில் நிலைமையை சரிசெய்யவும், நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும் மத்திய அரசு ஆத்மனிர்பார் பாரத் அபியான் என்ற திட்டத்தைத் தொடங்கியது.
இந்தத் திட்டத்தின்கீழ் சிறு, குறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்தும் பயன்பெறும்வகையில் பலவிதமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தால் நாட்டின் பொருளாதாரமும், தொழில் துறை நிறுவனங்களும் விரைவில் மேம்படும் எனப் பல பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
அதன்படி, இந்தத் திட்டம் பற்றி இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் புதிய தலைவர் உதய் கோட்டக் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "இந்தத் திட்டத்தின்மூலம் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாற்றம் நிகழப்போகிறது. இத்திட்டத்தைப் பயன்படுத்தி முதலீட்டை அதிகரித்து நிறுவனங்கள் விரைவில் மேம்படும். இதுவரை கண்டிடாத புதிய இந்தியாவையும் உருவாக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை முதலீடே முதன்மையாக அமைகிறது எனவும் உதய் கோட்டக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக வாட்ஸ்அப்பில் பதிவு: ராஜஸ்தான் டாக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு!