இண்டிகோ நிறுவனத்தில் மோசடி நடந்திருப்பதாக அதன் விளம்பரதாரர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து இண்டர் குளோப் ஏவியேஷனிடமிருந்து விவரங்களைக் கோரியுள்ளது செபி. நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ மீது விளம்பரதாரர்களில் ஒருவரான ராகேஷ் கங்வால், செபியிடம் புகார் அளித்துள்ளார்.
இரண்டு முக்கிய விளம்பரதாரர்களிடமிருந்து புகார்கள் வந்திருந்த நிலையில், அவற்றை செபி விசாரித்து வருகிறது. இந்த புகார் மனுவிற்கு ஜூலை 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு செபி, இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
![இண்டிகோ நிறுவனம் பங்குகள் கடும் சரிவு Issues between promoters have nothing to do with airline IndiGo CEO](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3804907_indigo.jpg)
இதனை தொடர்ந்து இண்டிகோ-வின் பங்கு விலை பெருமளவு சரிந்ததையடுத்து கருத்து கூறிய இதன் தலைமை செயல் அலுவலர், ‘தங்கள் நிறுவனத்தில் பெரியளவில் குழப்பங்கள் எதுவுமில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் கூட நிர்வாக ரீதியில் சரிசெய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.