ETV Bharat / business

வங்கி என்பது வெறும் லாபம் ஈட்டும் தொழிலா? - மிசோரம் பல்கலைக்கழகத்தின் வணிகத் துறை தலைவர் டாக்டர் என்.வி.ஆர் ஜோதி குமார்.

பொதுத் துறை வங்கிகளை குறைந்தபட்ச இருப்பாக வைத்திருப்பதற்குப் பதிலாக, பொது மற்றும் தனியார் வங்கிகள் ஆரோக்கியமாக இணைந்து செயல்படக்கூடிய திறமையான, உற்பத்தி, லாபம் மற்றும் நம்பகமான வங்கி முறையை உறுதிசெய்வது என்பதே மத்திய அரசுத் தரப்பில் புத்திசாலித்தனமாக இருக்கும் என்கிறார் மிசோரம் பல்கலைக்கழகத்தின் வணிகத் துறை தலைவர் டாக்டர் என்.வி.ஆர். ஜோதி குமார்.

s banking
வங்கி
author img

By

Published : Apr 15, 2021, 8:37 AM IST

நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்ததன் மூலம், இந்தியாவில் வங்கித் துறையை மாற்றுவதற்கான மத்திய அரசின் நோக்கத்தை நிதியமைச்சர் தெளிவுபடுத்தினார். 51 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளை தேசியமயமாக்குவதற்கான இந்திய அரசின் முக்கியக் கொள்கை முடிவை மாற்றியமைக்கும் செயல்முறையின் தொடக்கமாக இது கருதப்படலாம்.

சமீபத்தில் அரசாங்கம் பத்து பொதுத் துறை வங்கிகளை நான்கு பொதுத் துறை வங்கிகளோடு இணைத்த பின்னர், நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை இப்போது 27 லிருந்து வெறும் 12 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் ஆகியவை அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட நான்கு முக்கியத் துறைகளாகும். எனவே இந்தப் பொதுத்துறை நிறுவனங்களின் 'குறைந்தபட்ச இருப்பை' தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறது.

எனவே, இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் இந்த முயற்சி 2021-22 நிதியாண்டில் 1.75 லட்சம் கோடி ரூபாய் என்ற லட்சியப்பங்கு விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ள நரேந்திர மோடி அரசின் மெகா தனியார்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும்.

முதல்கட்ட வங்கி சீர்திருத்தத்தின்போது, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய ஆறு வங்கிகளை தனியார்மயமாக்குவதிலிருந்து விலக்க நிதி ஆயோக் பரிந்துரைத்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் உடனடித் திருத்த நடவடிக்கை கட்டமைப்பின்கீழ் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவற்றை உடனடியாகத் தனியார்மயமாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காது என்று செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

எனவே பஞ்சாப் & சிந்து வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றை உடனடியாகத் தனியார்மயமாக்கப்படுவதை உறுதிசெய்கிறது.

ஒட்டுமொத்தமாக, எந்த இரண்டு பொதுத் துறை வங்கிகளை அவர்கள் தனியார்மயமாக்க விரும்புகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதில் அரசின் தேவையற்ற தாமதம், பொதுத் துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களிடையே அவர்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி அவர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

தனியார்மயமாக்கல் ஏன்?

பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன்களின் அதிகரிப்பு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தொடர்ந்து கடுமையான சவாலாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நிதி நிலைத்தன்மை அறிக்கையில், கோவிட் தொற்றுநோயின் காரணமாக, பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இதன் விளைவாக மொத்த வாராக்கடன்களின் விழுக்காடு 2020 செப்டம்பரில் 7.5 லிருந்து 2021 செப்டம்பரில் 13.5 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுத் துறை வங்கிகளுக்கு அதிக மூலதனத்தை அரசு அளிக்க வேண்டியிருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில், மத்திய அரசு மறு மூலதன பத்திரங்கள், மூலதனங்கள் மூலம், ரூ.70,000 கோடி (நிதியாண்டு 2019), ரூ.80,000 கோடி (நிதியாண்டு 2018), ரூ.1.06 லட்சம் கோடி 2019 நிதியாண்டில் மறு மூலதன பத்திரங்களாகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.

பொதுத் துறை வங்கிகள் தொடர்ந்து செயல்பட 2014-19ஆம் ஆண்டில் வரிசெலுத்துவோரின் பணம் 3.19 டிரில்லியன் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. லாபத்தை உறுதிசெய்தல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற வேறு சில காரணங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட சில பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை அரசு நியாயப்படுத்த முயற்சித்தாலும் ஆண்டுதோறும் மூலதனத்தை வழங்குவது என்ற சிக்கல்தான் முக்கிய அம்சமாக உள்ளது.

மத்திய அரசு எதிர்கொள்ளும் இத்தகைய சிக்கலான சூழ்நிலையை, ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் கார்ப்பரேட்டில் செல்வாக்குமிக்க கடனை திருப்பி அளிக்காதவர்களுக்காகப் பொதுத் துறை வங்கிகளைச் சீரமைக்க விரும்புவதை அதன் இயலாமை, திறமையின்மை எனக் கருதப்படலாம்.

பொதுத் துறை வங்கிகளின் பாராட்டத்தக்க பங்கு

முக்கிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நாடு முழுவதும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு வங்கி சேவை கிடைப்பது உறுதி செய்வது போன்ற மேம்பாட்டு இலக்குகளை வசதியாக மறந்து, இலாப நோக்கத்திற்கான ஒரு குறுகிய பார்வை அளவுகோலின் அடிப்படையில் இந்திய பொதுத்துறை வங்கிகளின் செயல்திறனை குறைவாக மதிப்பிடுவதற்கு, வங்கித் துறையின் நிபுணர்களிடமிருந்து அரசாங்கம் கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

"தேசியமயமாக்கலுக்குப் பிறகு, இந்திய வங்கித் துறை வளர்ச்சி மற்றும் நோக்கம் வேறு எந்த நாட்டினாலும் ஒப்பிடமுடியாத அளவில் விரிவடைந்தது" என்று பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார். பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய விரிவாக்கம், சமூகத்தின் நலிந்த பிரிவினரால் கடன் பெறுவது போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் விரும்பிய நியாயமான சமூக பொருளாதார கடமைகளை நிறைவேற்றுவதன் நன்மைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளித்தது. விவசாய சமூகம், சிறு வணிகர்கள் மற்றும் கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத துறையில் ஈடுபடும் நபர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு உருவாகிறது.

பொதுத்துறை வங்கி அரசியல் முடிவுகளால் பாதிக்கப்படுகின்றன

இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்திற்கு வங்கித் துறையை தனியார்மயமாக்குவது ஆரோக்கியமானதல்ல என்று பொருளாதார வல்லுனர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது. எடுத்துக்காட்டாக, பொருளாதாரத்தின் வளர்ச்சி வங்கிகளின் கடன் இணைப்போடு பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற வங்கி நிபுணரும் பொருளாதார வல்லுனருமான ஒய்.வி. ரெட்டி கூறியதை போல, ஜப்பான் மற்றும் ஜெர்மனி அரசாங்கங்கள் வங்கிகளிடமிருந்து மூலதனத்தை பெற்று அதனை உள்கட்டமைப்பு திட்டங்களை எடுக்க பயன்படுத்துவதை போல இந்தியாவிலும் செயல்படுத்தலாம்.

ஐ.டி.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஐ.டி.எஃப்.சி. தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்கள் மற்றும் வாராக்கடன் விகிதங்களின் அளவு கணிசமாக அதிகமாக இருந்தது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் குறிப்பிட்ட துறைகளில், அதாவது உள்கட்டமைப்பு, மின்சாரம், சுரங்க மற்றும் தொலைத் தொடர்பு ஆகியவற்றில் சில கடன் வாங்குபவர்களுக்கு அதிக கவனம் செலுத்தாமல் பொதுத்துறை வங்கிகளின் தாராளமய மற்றும் தளர்வான கடன் கொள்கைகளும் காரணமாக இருக்கலாம். தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுடன் ஒப்பிடும்போது பொதுத்துறை வங்கிகளை திறம்பட மற்றும் திறமையாக நிர்வகிப்பதில் ஒரு கட்டுப்பாட்டாளரின் பங்கை ரிசர்வ் வங்கி தோல்வியுற்றது, மேலும் 1980களில் இருந்தே பொதுத்துறை வங்கிகளை அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாப்பதில் தோல்வியுற்றது.

தனியார்மயமாக்கல் என்பது பிரச்சினைகளுக்கு தீர்வல்ல

உண்மையில், தனியார்மயமாக்கலின் வேகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள் வாராகடன்களின் பெரும் சுமையுடன் போராடி வருகின்றன. மார்ச் 2010இல் ஒட்டுமொத்த கடன் வழங்கலில் பொதுத்துறை வங்கிகளின் சந்தை பங்கு 75% க்கும் அதிகமாக இருந்தது. அப்போதிருந்து, பொதுத்துறை வங்கிகளின் பங்கு படிப்படியாக குறைந்து வருகிறது, செப்டம்பர் 2020 நிலவரப்படி இது 57% ஆக இருந்தது. பத்து ஆண்டு காலகட்டத்தில், தனியார் வங்கிகளின் கடன் வழங்கல் விகிதம் 17% முதல் 35% வரை இரட்டிப்பாகியது. இருப்பினும், மொத்த வைப்புகளில் பொதுத்துறை வங்கிக்களின் பங்கு அதிகம் குறையவில்லை. மார்ச் 2012 இல் 74% சந்தைப் பங்கிலிருந்து, 2020 செப்டம்பரில் பொதுத்துறை வங்கிகளின் சந்தைப் பங்கு 62% ஆகக் குறைந்தது. இது தனியார் வங்கிகளின் போட்டியை நன்கு போட்டியிடும் திறனைக் குறித்தாலும் பொதுத்துறை வங்கிகள் மக்களால் மிகவும் நம்பகமானவை என்று கருதப்படுகின்றன

தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து கிளைகள், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து வங்கித் துறையை விரிவுபடுத்துவதில் பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்கு வகித்த போதிலும், வங்கித் துறை பெருநகரங்களை மையமாக வைத்தே செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2018ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த கிளைகளில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட 53 பெருநகர மையங்களில் 50%க்கும் அதிகமான வைப்புத்தொகை இருந்தன; அவர்கள் அதில் 64% கடன் கொடுத்தனர். ஏறக்குறைய ஒரே எண்ணிக்கையிலான கிளைகளைக் கொண்ட நகர்ப்புற இடங்களில் (19%) 21.5% வைப்புத்தொகையின் பங்கில் வெறும் 15% மட்டுமே கடனாக கொடுத்தனர். பெருநகரங்களில் உள்ள கிளைகள் வைப்புத்தொகையாக பெறப்பட்ட ரூ. 100ல் கிட்டத்தட்ட ரூ.97 கடனாக அளித்தன; இது நகர்ப்புறங்களில் 55% மட்டுமே.

பொதுவாக, கிராமப்புற மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வங்கி கிளைகளைதிறக்க வங்கிகள் தயங்குவதால் வங்கிகளுக்கு அணுகல் மோசமாக இருந்தது. விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு முன்னுரிமைத் துறை கடன் வழங்குவது இயலாது என்று தனியார் வங்கிகள் நிதி ரீதியாக கருதும் பொருளாதாரத்தில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கு பொதுத்துறை வங்கி தேவைப்படுவதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரதான் மந்திரி ஜன-தன் யோஜனா (PMJDY), பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா (PMGKY), பிரதமர் ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY), பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) , அடல் பென்ஷன் யோஜனா (APY), மற்றும் PM முத்ரா யோஜனா (PMMY) ஆகியவை சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை சென்றடைய வேண்டும். சமூக பொறுப்பை அடைவதில் அதன் நியாயமான பங்கை புறக்கணித்து, பொதுத்துறை வங்கிகள் ஒரு தூய வணிக நிறுவனமாக, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று வாதிடுவது நியாயமாக இருக்காது.

மேலும், முக்கியமாக பொதுத்துறை வங்கிகளின் வலுவான வங்கி முறை காரணமாக 2008 உலகளாவிய நிதி நெருக்கடியை இந்தியா தாங்கிக் கொண்டது என்பதை நாம் நினைவுகூர வேண்டும். வங்கிகளை இணைப்பது மட்டுமே சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யாது. பெரும்பாலும் மேற்கோள் காட்டப்பட்ட திறமையின்மை என்பது பொதுத்துறை வங்கிகளில் மட்டும் இல்லை. மேலும், தனியார் துறையில் உள்ள வங்கிகளுக்கு வாராக்கடன்களை நிர்வகிப்பதில் அதிக திறன் உள்ளது என்ற கருத்தை வங்கித் துறையின் சர்வதேச அனுபவம் குறித்த ஆய்வுகள் ஆதரிக்கவில்லை. அதேபோல், தனியார் வங்கிகளால் மோசடிகளை முற்றிலுமாக தவிர்க்க முடிந்தது என்ற கருத்தை ஆதரிக்கவும் எந்த ஆதாரமும் இல்லை.

முன்னோக்கி செல்லும் வழி

இந்தியாவில் சுமார் 19 கோடி பேர் இன்னும் வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது அவர்களை முறையான வங்கி நடைமுறைக்குள் கொண்டுவருவதற்கான உடனடி தேவையை உணர்த்துகிறது. இந்தியாவும் வெவ்வேறு குறியீடுகளில் பின்தங்கியிருக்கிறது. வங்கியை வெறும் வணிக நிறுவனமாகக் கருதுவது ஒரு சமூக மாற்றத்திற்கான முகவர் என்ற அதன் நியாயமான பொறுப்பை நிறைவேற்றாமல் இருக்க அனுமதிக்கும். ஆகவே, பொதுத்துறை வங்கிகளை குறைந்தபட்ச இருப்பாக வைத்திருப்பதற்கு பதிலாக, பொது மற்றும் தனியார் வங்கிகள் ஆரோக்கியமாக இணைந்து செயல்படக்கூடிய திறமையான, உற்பத்தி, லாபம் மற்றும் நம்பகமான வங்கி முறையை உறுதி செய்வது என்பதே மத்திய அரசு தரப்பில் புத்திசாலித்தனமாக இருக்கும். அதே நேரத்தில், வங்கிகள் முக்கியமாக போதுமான நிதி உதவியுடன் இருப்பதில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கிடையே நடுநிலையாளராக இருக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கியை அதன் சுதந்திரமான செயல்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.

இதையும் படிங்க: அதானி குழுமத்துடன் கைக்கோக்கும் ஃபிளிப்கார்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.