ETV Bharat / business

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் இந்திய ஏற்றுமதி - கிழக்காசிய பொருளாதார சக்திகள்

மும்பை: கரோனா லாக்டவுன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பெரும் சரிவைச் சந்தித்த ஏற்றுமதி ஜூலை மாதம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

Export
Export
author img

By

Published : Aug 21, 2020, 9:06 PM IST

நாடு முழுவதும் மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட கரோனா லாக்டவுன் காரணமாக பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடக்கத்தைச் சந்தித்துள்ளன.

இதன் விளைவாக நாட்டின் ஏற்றுமதி பெரும் சரிவைச் சந்தித்தது. சிரிசில் என்ற அமைப்பின் ஆய்வுத் தகவலின்படி, கடந்த ஏப்ரல் மாதம் -60.2 விழுக்காடு சரிவைக் கண்டது. இந்நிலையில், ஜூலை மாத காலகட்டத்தில் ஏற்றுமதி முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

குறிப்பாக சீனா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி தற்போது உயர்வைச் சந்தித்துள்ளது. இந்திய ஏற்றுமதியின் 16 விழுக்காடு பங்களிப்பை இந்த தெற்காசிய நாடுகள் மேற்கொள்கின்றன.

அதேவேளை, தற்போது கரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்னும் சில மாதங்களில் அந்நாடுகளில் தீவிரத்தன்மை குறையும்பட்சத்தில் ஏற்றுமதி பழைய நிலைக்கே திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்திய கல்வியாளர்களை ஊக்குவிக்கும் ‘ஆப்பிள் டீச்சர்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.