நாட்டின் நிதி நிலை நிலவரம் குறித்த முக்கியப் புள்ளி விவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் காலாண்டில் நாட்டின் நடப்புக் கணக்கு உபரித் தொகையானது 3.9 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டில் இந்தத் தொகை 0.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது 19.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்கு 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பற்றாக்குறையாக இருந்ததாகவும், கரோனா காரணமாக இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சுணக்கமே இந்த உபரித் தொகை உயர்வுக்கு காரணம் என ரிசர்வ் வங்கி தெரவித்துள்ளது.
2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது. இது, நாட்டின் ஏற்றுமதி - இறக்குமதி பெருமளவில் முடங்கியுள்ளதைக் குறிப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து 9ஆவது ஆண்டாக பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் முகேஷ் அம்பானி