உலகின் முன்னணி மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சத்திய நாதெல்லா மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர் எதிர்கால தொழில் நுட்ப மாற்றங்கள், அதற்கான தேவைகள் குறித்து உரையாற்றினார். அப்போது அவர், 'இந்தியாவைச் சேர்ந்த 72 விழுக்காடு மென்பொருள் பொறியாளர்கள் தொழில்நுட்பத்துறைக்கு, வெளியே தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாறிவரும் மின்னணு மென்பொருள் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தங்களை இந்திய மென்பொருள் வல்லுநர்கள், குறிப்பாக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.
விழாவில் பங்கேற்ற டி.சி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், ராஜேஷ் கோபிநாதன், 'நாட்டின் இளைஞர்கள் சிறப்பான அறிவு கொண்டவர்களாகவும், விரைவாக கற்கும் திறன்படைத்தவர்களாகவும் உள்ளனர். அதேவேளை செயல்திறன் குறித்த பயிற்சி அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. ஏஜைல்(Agile) போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை இந்தியர்கள் விரைந்து கற்க திறன் பயிற்சி அவசியம்' என ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொரோனாவை இந்திய சந்தை சமாளிக்கும் - வர்த்தக கூட்டமைப்பு நம்பிக்கை