ETV Bharat / business

அரசு விற்பனை தளங்களைச் சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்! - Government marketing sites

சென்னை: அரசு விற்பனை தளங்களைச் சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே. பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

அரசு விற்பனை தளங்களை சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்!

author img

By

Published : Nov 29, 2019, 9:46 PM IST

இந்தியன் வங்கி சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள சிறு, குறு, நடுத்தர மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது. இதில், அந்த வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே. பட்டாச்சாரியா, சென்னை பகுதியின் துணை பொது மேலாளர் சுப்ரமணியன், சிறு, குறு, நடுத்தர மேம்பாட்டு நிறுவன இயக்குநர் சுரேஷ் பாபுஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் பாபுஜி, "தற்போது பெரு நிறுவனங்களாக இருக்கும் பல நிறுவனங்கள் தொடக்கத்தில் சிறு, குறு, நடுத்தர மேம்பாட்டு நிறுவனத்தில்தான் பயிற்சி எடுத்துச் சென்றனர். நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. முன்பு நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் இருந்தது. தற்போது சிறு, குறு தொழில்களே முதுகெலும்பாக உள்ளன.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை கடன் வசதி பெறுவது, திறன் வசதி மற்றும் சந்தைப்படுத்துதல். இவற்றில் பிரதானமான பிரச்னை கடன் சேவையை பெறுவது. வங்கிகள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. அதேபோல், வங்கிகள் வாடிக்கையாளர்கள் கேட்கும் முழுமையான கடன் தொகையை வழங்குவதில்லை. இது சரி செய்யப்பட வேண்டும்" என்றார்.

இந்தியன் வங்கி செயல் இயக்குநர் எம்.கே. பட்டாச்சாரியா

இதைத் தொடர்ந்து பேசிய இந்தியன் வங்கி செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சாரியா, "பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விதி உள்ளது. இதனை புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு, நிறுவனங்கள் அறிவதில்லை. அரசின் இ-மார்க்கெட் இணையதளத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்ய முடியும். இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க... வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் உயரும் மொபைல் சேவைக் கட்டணங்கள்

Intro:Body:இந்தியன் வங்கி சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள சிறு, குறு, நடுத்தர மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது. இதில், அந்த வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சாரியா, சென்னை பகுதியின் துணை பொது மேலாளர் சுப்ரமணியன், சிறு, குறு, நடுத்தர மேம்பாட்டு நிறுவன இயக்குநர் சுரேஷ் பாபுஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் பாபுஜி, "தற்போது பெரு நிறுவனங்களாக இருக்கும் பல நிறுவனங்கள் தொடக்கத்தில் சிறு, குறு, நடுத்தர மேம்பாட்டு நிறுவனத்தில்தான் பயிற்சி எடுத்துச் சென்றனர். நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. முன்பு நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் இருந்தது, தற்போது சிறு, குறு தொழில்களே முதுகெலும்பாக உள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை கடன் வசதி பெறுவது, திறன் வசதி மற்றும் சந்தைப்படுத்துதல். இவற்றில் பிரதானமான பிரச்னை கடன் சேவையை பெறுவது. வங்கிகள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. அதேபோல், வங்கிகள் வாடிக்கையாளர்கள் கேட்கும் முழுமையான கடன் தொகையை வழங்குவதில்லை. இது சரி செய்யப்பட வேண்டும்" என்றார். இதை தொடர்ந்து பேசிய இந்தியன் வங்கி செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சாரியா, "பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விதி உள்ளது. இதனை புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு, நிறுவனங்கள் அறிவதில்லை. அரசின் இ-மார்க்கெட் இணையதளத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்ய முடியும். இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.