ETV Bharat / business

பிளாஸ்டிக் தயாரிப்பை அதிகரிக்க திட்டம் - பியூஷ் கோயல் - வணிக செய்திகள்

நாட்டின் பிளாஸ்டிக் உற்பத்தியை தற்போதைய ரூ.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் தயாரிப்பை அதிகரிக்க திட்டம் - பியூஷ் கோயல்

author img

By

Published : Dec 11, 2021, 8:49 PM IST

டெல்லி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது, "நாட்டின் பிளாஸ்டிக் உற்பத்தியை தற்போதைய ரூ.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்க வேண்டும். தரமான தயாரிப்புகள் வெளிவர உறுதிசெய்ய வேண்டும்.

பிளாஸ்டிக் தயாரிப்பை அதிகரிப்பதன் மூலம், நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், உள்நாட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் கருவிகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து கருவிகள் இறக்குமதி செய்வது குறையும்.

தரமான பிளாஸ்டிக்கை உறுதி செய்வதற்காக, இந்திய தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்) தேவையான இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை சிறந்த முறையில் பரிசோதிக்க வசதியாக ஆய்வகங்களை அமைக்கும்," என்றார்.

இதையும் படிங்க: நாட்டின் சோலார் மின் உற்பத்தி மும்மடங்கு உயர்வு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.