ETV Bharat / business

வருமான வரி தாக்கல்: திருத்தப்பட்ட ஐடிஆர்1 படிவம் குறித்த தகவல்

author img

By

Published : Jun 9, 2020, 11:49 AM IST

2019-20 மற்றும் 2020-21 மதிப்பீட்டு ஆண்டு மற்றும் நிதியாண்டுக்கான புதிய வருமான வரிக்கான படிவங்களை மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள விளைவுகளை அடுத்து செய்யப்பட்டுள்ளது.

Tax
Tax

வருமான வரி விதிகள் 2020 இல் விதி மாற்றங்கள் படி ஐடிஆர் -1 (சஹாஜ்), ஐடிஆர் -2, ஐடிஆர் -3, ஐடிஆர் -4 (சுகம்), ஐடிஆர் -5, ஐடிஆர் -6, ஐடிஆர் -7 மற்றும் ஐடிஆர்-வி படிவங்களை வெளியிட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய மாற்றங்களின் படி வரி செலுத்துவோர் ஒரு வருடத்தில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மின்சார கட்டணங்களை செலுத்தியிருந்தால், வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்திருந்தால், ரூ.1 கோடி வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்திருந்தால், சஹாஜ் ஐடிஆர் -1, படிவம், ஐடிஆர் -2, படிவம் ஐடிஆர் -3 மற்றும் படிவம் சுகம் (ஐடிஆர் -4). இவற்றை பயன்படுத்தி தாக்கல் செய்ய வேண்டும்.

வரி செலுத்துவோர் 2020 ஏப்ரல் முதல் 2020 ஜூன் வரையிலான தங்களது செலவினங்கள், வருமானம், முதலீடுகள், நன்கொடைகளை குறிப்பிடுவதற்கான பிரத்யேக இடங்கள் இந்த படிவங்களில் உள்ளன. இவற்றை பயன்படுத்தி அவர்கள் ஐடி சலுகைகளை கோரலாம். வரி செலுத்துவோர் இந்த சலுகைகளை 2019-20 நிதியாண்டு அல்லது 2020-21 நிதியாண்டிற்கு கோரலாம் அல்லது அறிவிக்கலாம்.

கரோனா வைரஸ் நெருக்கடியால் வழங்கப்பட்ட பல்வேறு காலவரிசை நீட்டிப்புகளின் முழு நன்மைகளையும் வருமான வரி செலுத்துவோர் பெறவேண்டி ஏபிஐ 2019-20 நிதியாண்டுக்கான ஐடிஆர் படிவங்களில் திருத்த உள்ளதாக ஏப்ரல் மாதத்தில் நிதி அமைச்சகம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவிட் -19 பாதிப்பு காரணமாக, வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் படி (சில விதிமுறைகளை தளர்த்துவது) 2020 இன் கீழ் அரசாங்கம் பல்வேறு காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன்படி, பிரிவு 80 சி (எல்ஐசி, பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் பல), 80 டி (மெடிகிளைம்), 80 ஜி (நன்கொடைகள்) மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய ஐடி சட்டத்தின் அத்தியாயம்-விஐஏ-பி இன் கீழ் விலக்கு கோருவதற்கான முதலீடு மற்றும் கொடுப்பனவுகளைச் செய்வதற்கான காலம் 2019-20 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரிவு 54 முதல் பிரிவு 54 ஜிபி வரையிலான மூலதன ஆதாயங்களுக்காக ரோல்ஓவர் நன்மை கோருவதற்கான முதலீடு, கட்டுமானம் அல்லது கொள்முதல் செய்வதற்கான தேதிகளும் 2020 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பரிவர்த்தனைகளைப் பற்றிய புகாரளிக்க வசதியாக படிவங்கள் மீண்டும் நிவாரண காலத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.