ETV Bharat / business

சமநிலையற்ற வருவாய்; அதிகரிக்கும் வேறுபாடு - இந்திய பொருளாதாரம்

2006 முதல் 2015ஆம் ஆண்டுக்குள் 1 விழுக்காடு பணக்கார இந்தியர்களின் சொத்து மதிப்பு ரூ. 21 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. இது 2017ஆம் ஆண்டு இந்திய பட்ஜெட்டுக்கு  இணையானது. இதே காலக்கட்டத்தில் சாதாரண இந்தியர்களின் ஆண்டு வருவாய் 2 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது .

economy
economy
author img

By

Published : Feb 7, 2020, 7:11 PM IST

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஒரு அதிபர் செய்யக்கூடாத காரியங்களை அவர் செய்தார். தோழமை நாடுகள் மற்றும் போட்டி நாடுகளுடன் அவர் வர்த்தக போர்களை நடத்த தொடங்கினார். அமெரிக்காவில் பெரும் நிறுவனங்களுக்கு வரி விகிதங்களை குறைத்தார். இது புதிய நிதி முதலீட்டுக்கு வழிவகுக்கும் புதிய தொழில்களை தொடங்கவும் உதவும் என்று ட்ரம்ப் தெரிவித்தார். வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க தன் முடிவுகள் உதவியாக இருக்கும் என்றும் நம்பினார். ட்ரம்ப்பின் முடிவுகள் எதிர்மறையாகி அவரையே திருப்பி தாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் யூகித்தனர்.

அமெரிக்க பொருளாதாரம் இப்போது நல்ல வடிவத்தில் வேகமான முன்னேற்றத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை 3.5 விழுக்காடாக குறைந்திருக்கிறது. நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் பொருளாதாரமாக உள்ளது. குற்றவாளிகள் , மாற்றுத்திறனாளிகள்கூட வேலை வாய்ப்பை பெறும் அளவுக்கு அமெரிக்க பொருளதாரம் வலுவடைந்துள்ளது. இவையெல்லாம் , அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற முக்கிய காரணிகளாக அமையக்கூடும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி விதிப்பை குறைத்ததே , புதிய தொழில் வாய்ப்பையும் வேலை வாய்ப்பையும் அதிகரித்தததாக ட்ரம்ப் கூறி கொள்ளக்கூடும். மேம்பாட்டின் பலன்கள் இயல்பாகவே சமுதாயத்தின் நலிந்த பிரிவுகளை சென்றடையக் கூடும். ஆனால், அவர் கூறுவதை ஏற்றுக்கொள்வதில் பல முரண்பாடுகள் உள்ளன.

சமீபத்திய ஆய்வில், வரி குறைப்பால் நிறுவனங்கள் டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு பலனடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், அதில் 20 விழுக்காடை மட்டுமே நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் மீண்டும் முதலீடு செய்வதும், 50 விழுக்காடு பங்குதாரர்களுக்கே மீண்டும் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நிறுவனங்கள் லாபத்தின் பெரும் பகுதியை பங்குதாரக்ளுக்கு வழங்கிவிட்டு ஊழியர்களுக்கு வேர்க்கடலை அளவுக்கு ஊதியம் வழங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வரி விதிப்பில் கிடைத்த பகுதியில் வெறும் 6 விழுக்காடு மட்டுமே ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களுக்கு 1978ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 940 விழுக்காடுவரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களுக்கு வெறும் 12 விழுக்காடு ஊதிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 144 விழுக்காடு அளவுக்கு உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொள்கைகளை வகுப்பதில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்க்கரேட் தாட்சர் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் போன்றோரை ட்ரம்ப் பின்பற்றுகிறார். அவர்கள் வகுத்த கொள்கைகள் பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியவை என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும், அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் வெற்றியை குறி வைத்தே கொள்கைகளை வகுக்கின்றனர்.

தற்போதைய அரசியல் சூழல் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு இந்திய அரசும் வரி விதிப்பை குறைக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக குறைக்கப்பட்டது. புதிய நிறுவனங்கள் 15 விழுக்காடு வரி செலுத்தினால் போதுமானது. வரி குறைப்பு என்பது புதிய தொழில் முதலீட்டுக்கும் வழி வகுக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், இந்திய பொருளதாரத்துக்கும் அமெரிக்க பொருளாதாரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கத்திய நிறுவனங்கள் தங்கள் செல்வத்தை தங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையில் அதிகளவில் மீண்டும் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டவை. கறுப்பு பணம் அதிகமாக பதுக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் கறுப்பு பணம் அதிகளவில் பதுக்கப்படும். இதனால், சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் ஏழ்மை நிலையிலேயே இருப்பார்கள். இந்தியாவில் 1 விழுக்காடு மக்களிடையே நாட்டில் வாழும் 73 விழுக்காடு மக்களின் செல்வம் குவிந்துள்ளது என்று Oxfam கூறுகிறது.

Oxfam என்பது 19 சுதந்திரமான அமைப்புகளைக் கொண்ட உலகளவில் வறுமை நிலையை ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். கடந்த 2018ஆம் ஆண்டு 67 கோடி ஏழை இந்தியர்களின் செல்வம் 1 விழுக்காடு இந்தியர்களிடத்தில் குவிந்திருந்தது. 2006 முதல் 2015ஆம் ஆண்டுக்குள் 1 விழுக்காடு பணக்கார இந்தியர்களின் சொத்து மதிப்பு ரூ. 21 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. இது 2017ஆம் ஆண்டு இந்திய பட்ஜெட்டுக்கு இணையானது. இதே காலக்கட்டத்தில் சாதாரண இந்தியர்களின் ஆண்டு வருவாய் 2 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது . அதே வேளையில், பணக்கார இந்தியர்களின் செல்வம் 6 மடங்கு அதிகரித்துள்ளது. வருவாய் சமநிலையை குறைப்பதற்காக Oxfam பங்குதாரர்களுக்கு வழங்கக்கடும் மானியத்தை குறைத்து அளிக்கவும், ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை உயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளது. நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கும் சாதாரண ஊழியர்களுக்கும் 20 விழுக்காடுக்கு மேல் சம்பள வித்தியாசம் இருக்கக் கூடாது என்றும் பரிந்துரைக்கப்ட்படுள்ளது.

அமெரிக்காவில் பணக்காரர்கள் தொழில் புரியும் திறனுடன் இருக்கிறார்கள். புதிய நிறுவனங்களை தொடங்குகிறார்கள். அதில், விழுக்காடு நிறுவனங்கள் வெற்றியடைந்துவிடுகின்றன. இதனால், பொருளாதாரமும் முன்னேற்றம் காண்கிறது. ஃபேஸ்புக் , உபேர் போன்ற பெரும் நிறுவனங்கள் ஸடார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்பட்டு , தொழில் புரியும் திறனால் பெரும் நிறுவனங்களாக மாறியவையே. அமெரிக்காவில் ஊழியர்களுக்கு பங்குகளை சம்பளமாகக்கூட வழங்கும் கலாசாரம் இருக்கிறது. இந்தியாவில் இன்போஸிஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களே இந்த கலாசாரத்தை பின்பற்றுகின்றன. தற்போது ரதன் டாடா இந்த முறைக்கு மாறத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இந்தியாவில் பணக்காரர்கள் தங்களது உண்மை சொத்து மதிப்பை இங்கே வெளிப்படையாக அறிவிப்பதில்லை. மறைக்கப்படும் சொத்துகளின் பலன்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்றன. அதோடு, சினிமா, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த முதலீடுகள் வேலை வாய்ப்பை உருவாக்க உதவுவதில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ரகசிய ஆய்வில், பணக்காரர்களின் 90 முதல் 97 விழுக்காடு கறுப்பு பணம் இந்திய பொருளாதாரத்துக்குள்தான் அடங்கியிருக்கின்றன என்பது தெரிய வந்தது. இதனல்தான் மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை பணம் பதுக்குவதை தடுக்க எந்த விதத்திலும் உதவவில்லை. உண்மையை சொல்லப்போனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை , நாடு முழுக்க வேலை வாய்ப்பு இழப்பையும் தொழில் துறையினர் நலிவையும் சந்திக்கவுமே காரணமாக அமைந்தது. பணமில்லாத காரணத்தினால் மக்களின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்தது. மக்களின் வாங்கும் திறன் குறைந்த காரணத்தினால், புதிய நிறுவனங்கள் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் நிறுவங்களுக்கான வரி விதிப்பை குறைத்துள்ளார். வரி விதிப்பு குறைப்பதால் ஏற்படும் பலன்கள் கிடைக்க இன்னும் நாம் காத்திருக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் தனி நபருக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். கிராமப்புற மேம்பாட்டுக்காக ரூ. 1,22,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 61,500 கோடி நேரடியாக மகாத்மா காந்தி கிராமப்புற திட்டத்துக்குச் சென்றுவிடும். இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட அதிகம். ஆனாலும், இந்த ஆண்டு மகாத்மா காந்தி கிராமப்புற மேம்பாட்டுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்து 71,000 கோடி ரூபாய் ஆகும். நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைந்த அளவு நிதிதான் மகாத்மா காந்தி கிராமப்புற மேம்பாட்டு திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய தேவைக்கு ஏற்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். பணி நாள்கள் அதிகரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் பட்ஜெட்டும் உயர்த்தப்பட வேண்டுமென்று அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு கிராமப்புற பகுதிகளில் சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ. 19, 000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெறும் ரூ. 500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஜன ஆரோக்யா யோஜனா திட்டத்துக்கு ரூ.6,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழைகள் கல்வி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை தங்கள் மேம்பாட்டு பயன்களாக அடைவதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ரூ. 375 குறைந்த அளவு சம்பளமாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ஒருநாள் ஊதியத்தை ரூ.176-ல் இருந்து ரூ. 178 ஆக மட்டுடே உயர்த்தியுள்ளது. 2 ரூபாய் ஊதிய உயர்வு ஒரு ஊதிய உயர்வா?, ஏழைகளுக்கு பொதுவான வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியாவில் 55 விழுக்காடு விவசாயிகள் நிலம் இல்லாதவர்கள். பிரதமரின் கிஷான் திட்டத்தில் இந்த விவசாயிகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண வழி வகை செய்ய வேண்டும். ஆனால், இந்த திட்டங்களுக்கு எல்லாம் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றம் மூலம் கிடைக்கும் பலன்கள் ஏழைகளை சென்றடையும் வகையில் அரசு, பெரிய நிறுவனங்கள், பணக்கார நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவில் மட்டுமே ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே வருவாய் வித்தியாசம் பெரிய அளவில் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. அமெரிக்காவில் 1 விழுக்காடு பெரும் பணக்காரர்கள் 47 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு இணையான செல்வத்தை கொண்டிருக்கின்றனர். அதேபோல் பிற வளர்ந்த நாடுகளில் 1 விழுக்காடு பணக்காரர்கள் 34 விழுக்காடு மக்களின் சொத்துகளுக்கு இணையான செல்வத்தை கொண்டுள்ளனர். இந்த செல்வங்கள் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் இடைநிலை நிர்வாக ஊழியர்களிடத்தில் குவிந்து கிடக்கிறது. அமெரிக்காவில் மத்திய , மாநில அரசுகள் கட்டுமானம், துறைமுகம் போன்ற உள் கட்டமைப்புமேம்படுத்தும் தொழில்களில் பங்கு பத்திரங்களை வெளியிடுகின்றன. 2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் பத்திர சந்தையின் மதிப்பு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் 60 விழுக்காடு பத்திரங்கள் வெளிநாட்டு அரசுகள், அமெரிக்க ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால் வாங்கப்பட்டவை. 33 விழுக்காடுபத்திரங்கள் பணபலம் படைத்த நடுத்தர வர்க்க அமெரிக்கர்களால் வாங்கப்பட்டுள்ளன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு , இந்த பத்திரங்களிலிருந்து அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதே வழியை பின்பற்றி இந்திய அரசும் பத்திரங்களை வெளியிட முன் வர வேண்டும்.

Intro:Body:

சமநிலையற்ற வருவாய்; அதிகரிக்கும் வேறுபாடு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஒரு அதிபர் செய்யக் கூடாத காரியங்களை அவர் செய்தார். தோழமை நாடுகள் மற்றும் போட்டி நாடுகளுடன் அவர் வர்த்தக போர்களை நடத்த தொடங்கினார். அமெரிக்காவில் பெரும் நிறுவங்களுக்கு வரி விகிதங்களை குறைத்தார். இது புதிய நிதி முதலீட்டுக்கு வழிவகுக்கும் புதிய தொழில்களை தொடங்கவும் உதவும்  என்றும் டிரம்ப் தெரிவித்தார். வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க தன் முடிவுகள் உதவியாக இருக்கும் என்றும் நம்பினார். டிரம்பின் முடிவுகள் எதிர்மறையாகி அவரையே திருப்பி தாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் ஊகித்தனர்.

அமெரிக்க பொருளதாரம் இப்போது நல்ல வடிவத்தில் வேகமான முன்னேற்றத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 3.5 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் பொருளதாரமாக உள்ளது. குற்றவாளிகள் , மாற்றுத்திறனாளிகள் கூட வேலை வாய்ப்பை பெறுமளவுக்கு அமெரிக்க பொருளதாரம் வலுவடைந்துள்ளது, இவையெல்லாம் , அடுத்து நடைபெறவுள் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முக்கிய காரணிகளாக அமையக் கூடும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி விதிப்பை குறைத்ததே , புதிய தொழில் வாய்ப்பையும் வேலை வாய்ப்பையும் அதிகரித்தததாக டிரம்ப்  கூறிக் கொள்ளக் கூடும். மேம்பாட்டின் பலன்கள் இயல்பாகவே சமுதாயத்தின் நலிந்நத பிரிவுகளை சென்றடையக் கூடும். ஆனால், டிரம்ப் கூறுவதை ஏற்றுக் கொள்வதில் பல முரண்பாடுகள் உள்ளன.

சமீபத்திய ஆய்வில், வரி குறைப்பால்  நிறுவனங்கள் டிரில்லியன் டாலர்களை அளவுக்கு பலனடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், அதில் 20 சதவிகிதத்தை மட்டுமே நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் மீண்டும் முதலீடு செய்வதும், 50 சதவிகிதம் பங்குதாரர்களுக்கே மீண்டும் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நிறுவனங்கள் லாபத்தின் பெரும் பகுதியை பங்குதாரக்ளுக்கு வழங்கிவிட்டு ஊழியர்களுக்கு வேர்க்கடலை அளவுக்கு ஊதியம் வழங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வரி விதிப்பில் கிடைத்த பகுதியில் வெறும் 6 சதவிகிதத்தை மட்டுமே ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு 1978-ம் ஆண்டு முதல் 2018- ம் ஆண்டு வரை 940 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களுக்கு வெறும் 12 சதவிகித ஊதிய உயர்வே வழங்கப்பட்டுள்ளது. மற்றோரு புறம், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 144 சதவிகிதம் அளவுக்கு உயரக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொள்கைகளை வகுப்பதில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்க்கரேட் தாட்சர் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் போன்றோரை டிரம்ப் பின்பற்றுகிறார்.  அவர்கள் வகுத்த கொள்கைகள் பொருதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியவை என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும், அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் வெற்றியை குறி வைத்தே கொள்கைகளை வகுக்கின்றனர்.

தற்போதைய அரசியல் சூழல் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு இந்திய அரசும் வரி விதிப்பை குறைக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. புதிய நிறுவனங்கள் 15 சதவிகிதம் வரி செலுத்தினால் போதுமானது. வரி குறைப்பு என்பது புதிய தொழில் முதலீட்டுக்கும் வழி வகுக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், இந்திய பொருளதாரத்துக்கும் அமெரிக்க பொருளாதாரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை கவனமாக கருத்தில்  கொள்ள வேண்டும். மேற்கத்திய நிறுவனங்கள் தங்கள் செல்வத்தை தங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையில் அதிகளவில் மீண்டும் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டவை.  கறுப்பு பணம் அதிகமாக பதுக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் கறுப்பு பணம் அதிகளவில் பதுக்கப்படும். இதனால், சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் ஏழ்மை நிலையிலேயே இருப்பார்கள். இந்தியாவில் 1 சதவிகித மக்களிடையே நாட்டில் வாழும் 73 சதவிகித மக்களின் செல்வம் குவிந்துள்ளது என்று Oxfam கூறுகிறது.

Oxfam என்பது 19 சுதந்திரமான அமைப்புகளைக் கொண்ட உலகளவில் வறுமை நிலையை ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். கடந்த 2018- ம் ஆண்டு 67 கோடி ஏழை இந்தியர்களின் செல்வம் 1 சதவிகித இந்தியர்களிடத்தில் குவிந்திருந்தது. 2006 முதல் 2015- ம் ஆண்டுக்குள் 1 சதவிகித பணக்கார இந்தியர்களின் சொத்து மதிப்பு ரூ. 21 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. இது 2017- ம் ஆண்டு இந்திய பட்ஜெட்டுக்கு  இணையானது. இதே காலக்கட்டத்தில் சாதாரண இந்தியர்களின் ஆண்டு வருவாய் 2 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது . அதே வேளையில்,  பணக்கார இந்தியர்களின் செல்வம் 6 மடங்கு அதிகரித்துள்ளது. வருவாய் சமநிலையை குறைப்பதற்காக  Oxfam பங்குதாரர்களுக்கு வழங்க்கடும் மானியத்தை குறைத்து அளிக்கவும், ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை உயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளது. நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கும் சாதாரண ஊழியர்களுக்கும் 20 சதவிகிதத்துக்கு மேல் சம்பள வித்தியாசம் இருக்கக் கூடாது என்றும் பரிந்துரைக்கப்ட்படுள்ளது.

அமெரிக்காவில் பணக்காரர்கள் தொழில் புரியும் திறனுடன் இருக்கிறார்கள். புதிய நிறுவனங்களை தொடங்குகிறார்கள். அதில், 5 சதவிகித நிறுவனங்கள் வெற்றியடைந்து விடுகின்றன. இதனால், பொருளாதாரமும் முன்னேற்றம் காண்கிறது. ஃபேஸ்புக் , உபேர் போன்ற பெரும் நிறுவனங்கள் ஸடார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்பட்டு , தொழில் புரியும் திறனால் பெரும் நிறுவனங்களாக மாறியவையே. அமெரிக்காவில் ஊழியர்களுக்கு பங்குகளை சம்பளமாக கூட வழங்கும் கலாசாரம் இருக்கிறது. இந்தியாவில் இன்போஸிஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களே இந்த கலாசாரத்தை பின்பற்றுகின்றன. தற்போது ரதன் டாடா இந்த முறைக்கு மாறத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இந்தியாவில் பணக்காரர்கள் தங்களது உண்மை சொத்து மதிப்பை இங்கே வெளிப்படையாக அறிவிப்பதில்லை. மறைக்கப்படும் சொத்துகளின் பலன்களை  அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படுகிறது. அதோடு, சினிமா, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த முதலீடுகள் வேலை வாய்ப்பை உருவாக்க உதவுவதில்லை.

 கடந்த 2014ம் ஆண்டு நடத்தபட்ட ரகசிய ஆய்வில், பணக்காரர்களின் 90 முதல் 97 சதவிகித கறுப்பு பணம் இந்திய பொருளாதாரத்துக்குள்தான் அடங்கியிருக்கின்றன என்பது தெரிய வந்தது. இதனல்தான் மோடி அரசு 500 மற்றும் 1000 ரூபாய்  நோட்டுகளை பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.  இந்த நடவடிக்கை பண பதுக்குவதை தடுக்க எந்த விதத்திலும் உதவவில்லை. உண்மையை சொல்லப் போனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை , நாடு முழுக்க வேலை வாய்ப்பு இழப்பையும் தொழில் துறையினர் நலிவையும் சந்திக்கவுமே காரணமாக அமைந்தது. பணமில்லாத காரணத்தினால் மக்களின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்தது. மக்களின் வாங்கும் திறன் குறைந்த காரணத்தினால்,  புதிய நிறுவனங்கள் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் நிறுவங்களுக்கான வரி விதிப்பை குறைத்துள்ளார். வரி விதிப்பு குறைப்பதால் ஏற்படும் பலன்கள்   கிடைக்க இன்னும் நாம் காத்திருக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் தனி நபருக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். கிராமப்புற மேம்பாட்டுக்காக  ரூ. 1,22,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 61,500 கோடி நேரடியாக மகாத்மா காந்தி கிராமப்புற திட்டத்துக்குச் சென்று விடும். இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட அதிகம். ஆனாலும், இந்த ஆண்டு மகாத்மா காந்தி கிராமப்புற மேம்பாட்டுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்து 71,000 கோடி ஆகும். நிர்ணயிக்கப்பட்டதை விட குறைந்த அளவு நிதிதான் மகாத்மா காந்தி கிராமப்புற மேம்பாட்டு திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது தற்போதைய தேவைக்கு ஏற்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். பணி நாள்கள் அதிகரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் பட்ஜெட்டும் உயர்த்தப்பட வேண்டுன்று அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு கிராமப்புற பகுதிகளில்  சாலைகள் மேம்பாட்டுக்காக  ரூ. 19, 000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெறும் ரூ. 500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஜன ஆரோக்யா யோஜனா திட்டத்துக்கு  ரூ.6,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழைகள் கல்வி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை தங்கள் மேம்பாட்டு பயன்களாக அடைவதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ரூ. 375 குறைந்த அளவு சம்பளமாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், கடந்த 2019- ம் ஆண்டு மத்திய அரசு ஒருநாள் ஊதியத்தை  ரூ.176- ல் இருந்து ரூ. 178 ஆக மட்டுடே உயர்த்தியுள்ளது. 2 ரூபாய் ஊதிய உயர்வு ஒரு ஊதிய உயர்வா?,  ஏழைகளுக்கு பொதுவான வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தியாவில் 55 சதவிகித விவசாயிகள் நிலம் இல்லாதவர்கள். பிரதமரின் கிஷான் திட்டத்தில் இந்த விவசாயிகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண வழி வகை செய்ய வேண்டும். ஆனால், இந்த திட்டங்களுக்கு எல்லாம் எதிர்பார்க்கப்பட்டதை  விட குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றம் மூலம் கிடைக்கும் பலன்கள் ஏழைகளை சென்றடையும் வகையில் அரசு , பெரிய நிறுவனங்கள், பணக்கார நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவில் மட்டுமே ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே வருவாய் வித்தியாசம் பெரிய அளவில் இருக்கிறது என்று சொல்லி விட முடியாது. அமெரிக்காவில் 1 சதவிகித பெரும் பணக்காரர்கள் 47 சதவிகித அமெரிக்கர்களுக்கு இணையான செல்வத்தை கொண்டிருக்கின்றனர். அதேபோல் பிற வளர்ந்த நாடுகளில் 1 சதவிகித பணக்காரர்கள் 34 சதவிகித மக்களின் சொத்துகளுக்கு இணையான செல்வத்தை கொண்டுள்ளனர். இந்த செல்வங்கள் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் இடைநிலை நிர்வாக ஊழியர்களிடத்தில் குவிந்து கிடக்கிறது. அமெரிக்காவில் மத்திய , மாநில அரசுகள் கட்டுமானம், துறைமுகம் போன்ற உள் கட்டமைப்புமேம்படுத்தும் தொழில்களில் பங்கு பத்திரங்களை வெளியிடுகின்றன. 2018- ம் ஆண்டு அமெரிக்கவின் பத்திர சந்தையின் மதிப்பு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் 60 சதவிகித பத்திரங்கள் வெளிநாட்டு அரசுகள் , அமெரிக்க ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால்   வாங்கப்பட்டவை.   33 சதவிகி பத்திரங்கள் பணபலம் படைத்த நடுத்தர வர்க்க அமெரிக்கர்களால் வாங்கப்பட்டுள்ளன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு , இந்த பத்திரரங்களில் இருந்து அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதே வழியை பின்பற்றி இந்திய அரசும் பத்திரங்களை வெளியிட முன் வர வேண்டும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.