கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்திய தொழிற்துறை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு 87 விழுக்காடு வேலை வழங்கும் சிறு, குறு தொழில்துறையினரின் நிலைமை மோசமடைந்துள்ளது.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சார்பில் சிறு, குறு வணிகர்கள், விவசாயிகளுக்கு கடன் சலுகைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, முறைசாரா தொழில்களுக்கு கடன் வழங்க சுமார் ரூ.50,000 கோடி தொகையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதை செயல்படுத்துவது குறித்து இந்திய வங்கித்துறை கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே வாரக்கடன் சிக்கலில் பொதுத்துறை வங்கிகள் தவித்துவரும் நிலையில் அதை சமாளித்து கடன் வழங்குவது எப்படி, வங்கி நிதிநிலையை ஆராய்ந்து ரிசர்வ் வங்கி அறிவிப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற விவரங்களை வங்கிகள் கூட்டமைப்பு ஆலோசித்தாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிறு, குறு வணிகர்களுக்கு உதவி செய்ய உறுதி பூண்டுள்ளோம் - பிரதமர் மோடி