கரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தம் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
ஆனால், அதற்கு முன்பே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, மே மாதத்தை ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்பு 33 விழுக்காடு அதிகரித்துள்ளதாக Naukri வலைதளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 44 விழுக்காடு குறைவு என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணக்கியல் துறை (53 விழுக்காடு அதிகரிப்பு), கால் சென்டர் துறை (48 விழுக்காடு அதிகரிப்பு), ஐடி-ஹார்ட்வேர் (37 விழுக்காடு அதிகரிப்பு), ஐடி-சாப்ட்வேர் (19 விழுக்காடு அதிகரிப்பு), கல்வி (49 விழுக்காடு அதிகரிப்பு), மருந்து (36 விழுக்காடு அதிகரிப்பு), விற்பனை துறை (33 விழுக்காடு அதிகரிப்பு) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் எண்ணிக்கையும் மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 28 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து Naukri வலைதளத்தின் முதன்மை வணிக அலுவலர் பவன் கோயல் கூறுகையில், "தளர்வு 1.0 அறிவிப்புக்குப் பிறகு, மாதந்தோறும் வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகரித்துவருவது ஊக்குவிப்பதாக உள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.
மும்பையில் 56 விழுக்காடு, டெல்லியில் 54 விழுக்காடு, சென்னையில் 52 விழுக்காடு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
இதையும் படிங்க: ரயில் வழியே 6.7 லட்சம் கார்களை தளவாடம் செய்துள்ள மாருது சுசுகி நிறுவனம்!