மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஹெச்டிஎஃப்சி வங்கி 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த இந்நிறுவனம் 1 லட்சத்துக்கும் மேலான தொழிலாளர்களைக் கொண்டு செயல்படுகிறது.
இந்நிலையில் புதிய ஒருங்கிணைந்த எரிபொருள் அட்டை (Co-Branded Fuel Card) ஒன்றை இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைத்து ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank), பயனாளிகளுக்கான புதிய சலுகைகள் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தது. இந்த அட்டையைப் பயன்படுத்தி நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் ரிவார்டு பாயின்ட் (Reward Point) கொடுக்கப்படும். அந்த ரிவார்டு பாயின்ட்களைப் பயன்படுத்தி, இந்தியன் ஆயில் மையங்களில் பெட்ரோல், டீசல் பெற்றுகொள்ளலாம். ரூபெ(Rupay), விசா(Visa) கார்டு வடிவில் வரும் இந்த அட்டையை 27 ஆயிரம் இந்தியன் ஆயில் மையங்களில் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு வருடத்திற்கு 50 லிட்டர் வரை இந்த அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க:Latest National News வங்கிகள் மூடப்படாது - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி