மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி எம்.சி.எல்.ஆர். விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளது.
இந்த விகிதமானது இம்மாதம் முதல் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எம்சிஎல்ஆர் விகிதம் குறைந்துள்ளதால், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாத மாதம் செலுத்தும் தவணைகள் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது கரோனா பாதிப்பு மூலம் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு சற்று நிவாரணம் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. எம்.சி.எல்.ஆர். விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகளைக் குறைத்துள்ள நிலையில், ஓராண்டுக்கான வட்டி விகிதமும் கணிசமான அளவு குறைந்துள்ளது. இதுவே கடந்த மாதத்தில் எம்.சி.எல்.ஆர். விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளை வங்கி குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியானது ரெபோ விகிதத்தினை குறைக்கா விட்டாலும், எஸ்பிஐ தனது வட்டி விகிதத்தினைக் குறைத்துள்ளது இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.