கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது. பணப்புழக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணப்புழக்கத்தை மீட்டெடுத்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு உதவும் நோக்கில் அவசரக் கடன் வழங்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு ஐந்து கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் குறைகளைக் கேட்டறிந்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் பல திட்டங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துவருகிறது. இதுவரை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்த ஒரு லட்சம் பேரை தொடர்பு கொண்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சரிவில் இந்திய பங்குச் சந்தை!