டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே (Google Pay) செயலியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், கூகுள் பே செயலி நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக எக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியுடன் (Equitas Small Finance Bank) கூகுள் பே கூட்டணி அமைத்துள்ளது. பொதுவாக நிலையான வைப்புத்தொகை முதலீடு செய்ய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். ஆனால், கூகுள் பே செயலி மூலம், வங்கிக் கணக்கு இல்லாமலேயே நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) முதலீடு செய்ய முடியும்.
தற்போது வங்கிகளில் சராசரியாக நிலையான வைப்புத் தொகைக்கு (Fixed Deposit) கிடைக்கும் வட்டியை காட்டிலும் அதிக வட்டி கிடைக்கிறது.
கூகுள் பே மூலம் வாடிக்கையாளர்கள் நிலையான வைப்புத்தொகையில் (Fixed Deposit) முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யலாம் என எக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'சீனாவில் எதிரொலிக்கும் கீழடியின் பெருமை'