நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு நீட்டித்துவரும் சூழலில், இதன் காரணமாக நாடு முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிறு, குறு நிறுவனங்களும், ஸ்ட்ராட் அப் எனப்படும் குறைந்த முதலீட்டின் மூலம் தொடங்கப்பட்ட நிறுவனமும் மேற்கொண்டு நடத்த முடியாத சூழலைச் சந்தித்துவருகின்றன.
இதன் காரணமாக அந்நிறுவனங்கள் விற்கும் சூழலுக்கு வரும் நிலையில், பெரிய தொழிலதிபர்களும், தொழில்நிறுவனங்களும் எளிதாக அவர்களை கவர்ந்துசெல்லும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அந்நிறுவனங்கள் நஷ்டமடையாதவாறு மதிப்பை காப்பாற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது விளக்கத்தை தெரிவித்தார். அதன்படி, நாட்டில் இயங்கும் நிறுவனங்களின் கள நிலவரத்தை தொடர்சியாக கண்காணித்துவருகிறோம். நிறுவனங்கள் ஊரடங்குக்குப்பின் மீண்டும் இயங்குவதற்கு அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும். அதேபோல் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் மதிப்பிற்கும் எந்தவித பங்கமும் ஏற்படாத வகையில் அரசு வழிவகைச் செய்யும் என உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: லாக்டவுன் 5.0 விதிமுறைகள் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு