ETV Bharat / business

தலைக்கவசத்துக்கு பிஎஸ்ஐ முத்திரையை கட்டாயப்படுத்த மத்திய அரசு முடிவு! - ஹெல்மெட்

இந்தியச் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் தலைக்கவசங்கள் தரமற்றவையாக உள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இருசக்கர வாகன தலைக் கவசங்களுக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (பிஎஸ்ஐ) சான்றிதழை அமல்படுத்துவது குறித்த பொதுப் பரிந்துரைகளைக் கேட்டுள்ளது.

தலைக்கவசம்
தலைக்கவசம்
author img

By

Published : Aug 1, 2020, 8:32 PM IST

டெல்லி: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இருசக்கர வாகன தலைக் கவசங்களுக்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (பிஎஸ்ஐ) சான்றிதழை அமல்படுத்துவது குறித்த பொதுப் பரிந்துரைகளைக் கேட்டுள்ளது.

இந்தியச் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் தலைக்கவசங்கள் தரமற்றவையாக உள்ளன. ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. அங்கீகாரம் இல்லாத தரமற்ற தலைக்கவசங்களால் வாகன ஓட்டிகளின் உயிரிழப்பு அதிகரித்துவருகிறது.

பெரும்பாலான நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவு!

இதைத் தடுக்க தலைக்கவசத்தில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம். இந்திய தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே செப்டம்பர் 4 முதல் அமலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்புவோருக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக தலைக்கவசங்களை இந்திய தர நிர்ணயச் சட்டம் 2016இன் படி, கட்டாயச் சான்றின் கீழ் கொண்டு வருவதற்கான வரைவு அறிவிப்பை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிஎல்ஐ மூலம் பயன்பெற விண்ணப்பித்திருக்கும் சாம்சங், ஆப்பிள்-இன் ஒப்பந்த நிறுவனங்கள்!

இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய பிஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட தலைக்கவசம் மட்டுமே வைத்திருக்க இது உதவும். இது இருசக்கர வாகன தலைக்கவசங்களின் தரத்தை மேம்படுத்துவதோடு, சாலைப் பாதுகாப்பு சூழலையையும் இது மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.